பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் இறந்த நிலையில் பெண் யானை மீட்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் இறந்த நிலையில் பெண் யானையின் உடல் மீட்பு.


கோவை: நீலாம்பதி சரக பகுதியில் காப்புக் காட்டிற்குள் இறந்த நிலையில் பெண் யானை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் பிரிவு நீலாம்பதி சரக பகுதியில் காப்புக் காட்டிற்குள் வனப் பணியாளர்களின் வழக்கமான ரோந்துப் பணிக்குச் சென்றனர்.

அப்போது சுமார் 20-30 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை இறந்த நிலையிலிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் அந்த வனப் பகுதியைத் தணிக்கை செய்தனர்.

மேலும் மாலை நேரம் ஆனதால் இறந்த யானைக்கு நாளை காலை கோவை மாவட்ட வன அலுவலர், உதவி வனப் பாதுகாவலர், தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள், கிராம வனக் குழுத் தலைவர் மற்றும் வனக் பணியாளர்கள் முன்னிலையில், வனக் கால்நடை அலுவலர் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் உடல்கூறாய்வு பரிசோதனை நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...