பொள்ளாச்சியில் தென்னையில் நோய் தாக்குதல் - விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி!

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரளா வாடல் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து பொள்ளாச்சியில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 16 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்னை மரங்களில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு விதமான நோய் மற்றும் பூச்சிகள் தாக்கி சாகுபடி பாதிப்புக்குள்ளாகிவருகிறது. இதனால், தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதனைத் தொடர்ந்து, தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரளா வாடல் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் சார்பில் பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு விஞ்ஞானிகள் கவிதா, ஜானகிராணி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு தென்னங்கன்றுகள் தேர்வு செய்யும் முறை, பூச்சிகளை கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், காண்டாமிருக வண்டை கவர்ந்திழுக்கும் இனக்கவர்ச்சி பொறிகள், உயிர் உரங்கள் பயன்பாடு போன்றவை குறித்து செயல் விளக்கத்துடன் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினர்.

இதில், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏராளமான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...