தாராபுரத்தில் அண்ணாவின் 54வது ஆண்டு நினைவு தினம் - உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 54வது நினைவுவ தினத்தையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு தாராபுரம் நகர அ.இ.அ.தி.மு.க. சாா்பில் மலர் மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 54-ஆவது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தாராபுரம் நகர அ.இ.அ.தி.மு.க. ஓபிஎஸ் அணி சாா்பில் நகரச் செயலாளர் ஜகவர் தலைமையில், அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.டி.கே. காமராஜ் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



இந்த நிகழ்ச்சியில், தொகுதி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, நகர துணை செயலாளர் பூபதி,மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹிம்,மாவட்ட மாணவர்அணி செயலாளர் சுஜித் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...