அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான ஊழல் புகார் - 70 பக்க ஆவணங்கள் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது அளித்த ஊழல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் மீண்டும் 70 பக்க ஆவணங்களை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.


கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பேருந்து நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்வதில் ஊழல் செய்ததாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோதும், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு திட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் செய்திருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் ரகுநாத் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதில், உடுமலை ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது எத்தனை திட்டங்கள் கையெழுத்தானது, முடிக்கப்பட்டதாக கூறிய பணிகள் நிறைவடையாமல் உள்ள புகைப்படங்களுடன் ஆவணங்களை அளித்துள்ளதாக கூறிய ரேஸ்கோர்ஸ் ரகுநாத், முன்னாள் அமைச்சர் மீதான தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...