தாராபுரத்தில் அண்ணா நினைவு தினம் - திமுகவினர் அமைதி ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணாவின் 54வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அமைதி ஊர்வலம் சென்ற நகர திமுகவினர், அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



திருப்பூர்: தாராபுரம் அமராவதி ரவுண்டானா அருகே ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் தாராபுரம் திமுக நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்தை கையில் ஏந்தியவாறு அமைதியாக ஊர்வலமாகச் சென்றனர்.



பொள்ளாச்சி ரோடு, பூக்கடைக் கார்னர், பெரிய கடைவீதி, வழியாக ஊர்வலமாகச் சென்ற திமுகவினர், பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலையை அடைந்தனர். அங்குள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் ரோஜா மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...