ஆடம்பர வாழ்க்கை, சொத்துக்காக 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் - திருப்பூரில் பெண் கைது!

திருப்பூரில் சொத்துக்களை அபகரிப்பதற்காக பல ஆண்களை திருமணம் செய்த பெண் தேவியை கைது செய்த போலீசார், விசாரணையில் 3வது கணவரை கொலை செய்துவிட்டு நான்காவதாக ரவி என்பவரை திருமணம் செய்ய திட்டமிட்டது அம்பலம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் அடுத்த குன்னத்தூர் அருகேயுள்ள தோட்டத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(52). விவசாயியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சேர்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சுப்பிரமணியின் தாய்க்கும், தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சுப்பிரமணியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து தேவி திண்டுக்கல்லுக்கு சென்று வாழலாம் என சுப்பிரமணியை அழைத்துள்ளார். இதற்கு அவர் வர மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவரது வலது காலில் தேவி ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது.



இதில் சுப்பிரமணி சுயநினைவை இழந்த நிலையில் அவரை திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரத்தத்தில் பூச்சி மருந்து கலந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி தேவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், சுப்பிரமணிக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்கவே தேவி தனது கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான தேவி நாமக்கல்லில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு தேவியை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தேவி ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்ததும், சுப்பிரமணியை மூன்றாவதாக திருமணம் செய்து அவரது சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது.

அந்த திட்டம் நிறைவேறாததால் சுப்பிரமணிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்யும் முயற்சியும் நிறைவேறாததால், நாமக்கல்லுக்கு தப்பி சென்ற அவர், நான்காவதாக ரவி என்பவரையும் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

நாமக்கல்லை சேர்ந்த கோடீஸ்வரரான ரவிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. ரவிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்த நிலையில், 2வது திருமணம் செய்து வைக்க அவருக்கு உறவினர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர்.

இதையறிந்த தேவி, சுப்பிரமணியை விட ரவியிடம் அதிக பணம் உள்ளதால் அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கு சுப்பிரமணி தடையாக இருப்பார் என்பதால் அவரை விஷ ஊசி போட்டு கொன்று விட்டு ரவியை திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டியுள்ளார்.

சுப்பிரமணியை கொலை செய்தால் அவரது சொத்துக்களும் கிடைத்து விடும் என்பதால் கடந்த 15ஆம் தேதி விஷ ஊசியை சுப்பிரமணிக்கு செலுத்தியுள்ளார். ஆனால் சுப்பிரமணி உயிர் பிழைத்து கொண்டதால், போலீசில் சிக்காமல் இருக்க நாமக்கல்லுக்கு தப்பி சென்ற தேவி கடந்த 27-ந்தேதி ரவியை திருமணம் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சொத்துக்களை அபகரிக்கவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் தேவி இதுபோன்ற பல ஆண்கள், தொழிலதிபர்களை மயக்கி திருமணம் செய்திருக்கலாம் என தெரிகிறது. அவருக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிவித்துள்ள போலீசார், கைதான தேவியிடம் இருந்து 6 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...