உலக சதுப்பு நில தினம்: உதகை அரசு கல்லூரியில் கட்டுரை, ஓவியம் போட்டி!

உதகை அரசு கலைக்கல்லூரியில் சதுப்பு நிலங்களை பாதுகாப்பது குறித்து நடைபெற்று வரும் கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் உலக சதுப்பு நில தினத்தையொட்டி, சதுப்பு நில பாதுகாப்பு குறித்த தலைப்பில், பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ந்தேதி உலக சதுப்பு நில தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதுப்பு நிலங்கள் மண் அரிப்பை தடுப்பதற்கும், கடல் அலைகள் மற்றும் சூறைக்காற்றில் இருந்து மரங்களை காக்கவும், தண்ணீரை அதிக நாட்கள் சேமித்து வைக்கவும் உதவுகிறது.



இதனையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரியில் சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பாதுகாக்கும் விதமாக மாவட்ட அளவிலான ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.



நீலகிரி மாவட்ட உதவி வன அலுவலர் தேவராஜ் தலைமையில், வனவிலங்கு அறிவியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலையில், இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் அரசு கலை கல்லூரி பொறுப்பு முதல்வர் எபினேசர் மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...