அண்ணா நினைவு தினம் - நீலகிரி எம்.பி ஆ.ராசா அலுவலகத்தில் திமுகவினர் மலர் தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி உதகை நகர திமுக சார்பில் நீலகிரி எம்.பி ஆ.ராசா அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


நீலகிரி: பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு எம்.பி ஆ.ராசாவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாளையொட்டி நீலகிரி மாவட்ட திமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கும், படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல், உதகை நகர திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இதனை தொடர்ந்து ஹில் பங்க் பகுதியில் உள்ள நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் அலுவலகத்தில் அண்ணாவின் உருவ படத்திற்கு உதகை நகர திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், உதகை நகர திமுக செயலாளர் ஜார்ஜ், ஆ.ராசாவின் நேர்முக உதவியாளர் நந்தி ரவி, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், நகர கழகத் துணைச் செயலாளர்கள் கார்டன் கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர் ரவீந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், வனிதா, மேரி பிளோரினா, பிரியா, கழக நிர்வாகிகள் மஞ்சு குமார், குழந்தைநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...