கோத்தகிரி அருகே உலா வரும் கரடி - கூண்டு வைத்து பிடிக்கக் கோரிக்கை!

கோத்தகிரி அருகே உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சம். கூண்டு வைத்து கரடியை விரைவில் பிடிக்கும்படி மக்கள் கோரிக்கை.



நீலகிரி: பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியைப் பிடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து அரவேணு செல்லும் சாலையில் பெரியார் நகர் பகுதி உள்ளது. இங்குள்ள குடியிருப்பைச் சுற்றிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 கருஞ்சிறுத்தை, 2 சிறுத்தை என 4 சிறுத்தைகள் உலா வந்தன.

அதேபோல் கரடிகளும் தொடர்ந்து உலா வந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். மேலும் கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினருக்குத் தொடர் கோரிக்கை விடுத்தனர்.



இதனையடுத்து கடந்த சில நாட்களாகக் கரடி நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஒற்றைக் கரடி உலா வந்தது. நீண்ட நேரம் குடியிருப்பைச் சுற்றி வந்த கரடி பின்பு தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது.

அப்பகுதியில் உள்ள குடியிருப்பைச் சுற்றி கரடிகள் தொடர்ந்து உலா வருவதை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடித்து, வேறு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரியில் பிடிபட்ட இரண்டு கரடிகள் முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...