'திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தால் ஆதரிப்போம்..! - டிடிவி தினகரன் தகவல்

ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு பேசிய டிடிவி தினகரன், திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தால் ஆதரிப்போம் என்றார்.



சென்னை: திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தால் ஆதரிப்போம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.



பேரறிஞர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



இதனை தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, திமுக திருந்தி விட்டது என நம்பி மக்கள் ஆட்சியை திமுகவுக்கு கொடுத்து விட்டனர். ஆனால் அவர்கள் மீண்டும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

60 மாதங்களில் பெற வேண்டிய கெட்ட பேரை தற்போது திமுக 20 மாதங்களில் பெற்றுவிட்டது. அதனால், தீயசக்தி திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து கூட்டணி அமைத்து செயல்பட வேண்டும்.

திமுகவை தார்மீகமாக எதிர்க்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால் அதை கண்டிப்பாக நாங்கள் ஆதரிப்போம்.

நான் எடப்பாடி பழனிச்சாமி போல உச்சத்தில் இருந்து செயல்படுபவன் அல்ல. திமுகவை வீழ்த்துவதற்காக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டால் அவருடன் இணைந்து பேச திறந்த மனதோடு இருக்கிறேன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுகவினர் ஆறாயிரம் ரூபாய் கொடுத்தனர். தற்போது ஈரோடு கிழக்கு தேர்தலில் எட்டாயிரம் ரூபாய் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கே.என் நேரு பேசிய ஆடியோவை தொலைக்காட்சியில் பார்த்து அறிந்து கொண்டேன்.

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தேவையற்றது. முதல்வர் ஸ்டாலினின் செயல், ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பதை போன்று உள்ளது. திமுகவிடம் அதிக அளவு நிதி உள்ளது. எனவே அரசு பணத்தில் நினைவுச் சின்னம் அமைக்காமல் திமுக நிதியில் நினைவு சின்னம் அமைக்கலாம்.

மெரினாவில் கலைஞர் நினைவிடத்திற்காக நீதிமன்றம் கொடுத்துள்ள நிலத்தில், 100 அடிக்கு கூட நினைவு சின்னம் அமைத்துக் கொள்ளலாம். பேனா நினைவு சின்னம் கடலில் அமைந்தால் உடைப்பேன் என்று சொல்லுவதை விட அகற்றுவேன் என்று சீமான் கூறியிருக்கலாம். உணர்ச்சி வேகத்தில் அவ்வாறு பேசியிருப்பார்.

மத்திய பட்ஜெட்டில் உள்ள பல்வேறு குறைகளை ஏற்கனவே சுட்டிக் காண்பித்து இருக்கிறேன். மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...