பழனிக்கு பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தார் எம்எல்ஏ வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வுமான வானதி சீனிவாசன் பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதனிடையே, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வுமான வானதி சீனிவாசன் கடந்த 30 ஆம் தேதி பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டார்.

ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து பாத யாத்திரை புறப்பட்ட அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழியனுப்பி வைத்தார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொள்ளாச்சி, உடுமலை வழியாக நடந்து வந்த வானதி சீனிவாசன் இன்று பழனி வந்தடைந்தார்.



பழனி சண்முக நதியில் புனித தீர்த்தம் தெளித்துக் கொண்டு, தைப்பூசத் திருவிழா நடைபெறும் பழனி பெரியநாயகி அம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.



இதைத்தொடர்ந்து பழனி மலை கோயிலுக்கு சென்ற வானதி சீனிவாசன் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். பாதயாத்திரை ஆக பழனி வந்த வானதி சீனிவாசனுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதயாத்திரையை நிறைவு செய்த வானதி சீனிவாசன் சுவாமி தரிசனம் செய்த பிறகு மீண்டும் கோவைக்கு திரும்பினார்.

முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும், கோவை தெற்கு தொகுதியில் தான் பெற்ற வெற்றிக்காக பழனி முருகனுக்கு வைத்த வேண்டுதலை நிறைவேற்றவும் இந்த பாதயாத்திரையை மேற்கொள்வதாக வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...