'கோவைக்கு என்றும் என் இதயத்தில் தனி இடம் உண்டு..!' - ஆட்சியர் சமீரன் உருக்கம்

கோவை மக்களின் அன்பும் பாசமும் என்னை மிகவும் கவர்ந்தன. கோவைக்கு என்றும் என் இதயத்தில் தனி இடம் உண்டு என்று கோவை ஆட்சியராக இருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர் சமீரன், தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு.


கோவை: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ஜி.எஸ்.சமீரன் சென்னை மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாளை சென்னை செல்லும் அவர் அங்குப் பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார். இந்நிலையில் கோவை மக்களின் அன்பும் பாசமும் தன்னை மிகவும் கவர்ந்தன எனவும் கோவைக்கு என் இதயத்தில் என்றும் தனியிடம் உண்டு என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "அன்புள்ள கோவை மக்களே, கோவையில் எனக்குத் திருப்தியான பதவிக் காலமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இணைந்து பல விஷயங்களைச் செய்து பல விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைத் தொட்டோம்.

கோவிட் நெருக்கடிக் காலத்திலிருந்து இன்று வரை நீங்கள் அனைவரும் அனைத்து நல்ல காரியங்களுக்காகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்தீர்கள். கோவை மக்களின் அன்பும் பாசமும் என்னை மிகவும் கவர்ந்தன. கோவைக்கு என்றும் என் இதயத்தில் தனி இடம் உண்டு. உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...