மருதமலைக் கோயிலில் நாளை தைப்பூச தேரோட்டம் - ஒளி வெள்ளத்தில் மின்னும் முருகன் கோயில்!

கோவை மருதமலைக் கோயிலில் நாளை தைப்பூச தேரோட்டத்தையொட்டி வண்ண விளக்குகளால் அலங்காரம். தைப்பூச தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு.


கோவை: மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூச தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

கோவையை அடுத்த மருத மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமா்சையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தைப்பூச தேரோட்டத்தையொட்டி மருத மலைக் கோவிலில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளைப் பார்வையிடக் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேற்று மருத மலைக் கோவிலுக்கு வந்தார்.

தொடர்ந்து வாகன நிறுத்தும் இடம், பக்தர்கள் பாதுகாப்பாகப் பாதயாத்திரை வருவதற்கான வழிப்பாதைகள், மலைப்பாதை, மலைக்கோவில் மீது சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிகள், தேர் சுற்றி வரும் கோவில் வளாகம், ராஜகோபுர பகுதி ஆகியவற்றைப் பார்வையிட்டார். பின்னர் அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

தைப்பூச திருவிழாவையொட்டி மலைக்கோவிலுக்கு செல்ல இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாததால், மருதமலை அடிவாரப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கோவில் சார்பில் மினி பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டு பக்தர்களை மலைக் கோவிலுக்கு ஏற்றி செல்லும்படி கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பாதுகாப்பாக சென்று தரிசனம் செய்யும் வசதி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...