உடுமலையில் வெளுத்து வாங்கும் கனமழை- மக்கள் மகிழ்ச்சி

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில், கனமழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை வெளுத்து வாங்கியது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பகல் நேரங்களில் வெயில் அதிகமாகவும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்பட்டது.

இதனால் மாறுபட்ட சீதோசன நிலை காரணமாகப் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.



இதற்கு இடையில் தற்பொழுது இடைவிடாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கி வருவதால் கடும் வெப்பத்தால் அவதி அடைந்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



இருப்பினும் நகரப்பகுதியில் வணிக நிறுவனங்களைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் செல்ல முடியாமல் உரிமையாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...