கோவையில் மதநல்லிணக்கம் - பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்கள்!

கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகள் வழங்கிய இஸ்லாமியர்களின் மத நல்லிணக்கத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.



கோவை: கோவையிலிருந்து உக்கடம் வழியாகச் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்குப் பசியில்லா கோவை அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பக்தர்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பழனிக்குப் பாதயாத்திரை ஆக பக்தர்கள் செல்கின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கோவையிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் செல்கின்றனர்.



இந்த நிலையில் கோவையிலிருந்து உக்கடம் வழியாகச் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்குப் பசியில்லா கோவை அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பக்தர்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதில் கோவை அறக்கட்டளை தலைவர் சையது இப்ராஹிம், செயலாளர் மன்சூர், பொருளாளர் நிஜாம்தீன், கௌரவ ஆலோசகர் கந்தசாமி மற்றும் பசியில்லா கோவை அறக்கட்டளை சேர்ந்த இஸ்மாயில், பாரூக், பஷீர், தளபதி மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...