மேட்டுப்பாளையத்தில் சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட தள்ளுவண்டி கடைக்காரர் - கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட தள்ளுவண்டி கடைக்காரரை பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது31). இவர் காரமடை பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரது கடைக்கு கடந்த வாரம் பாக்கியராஜ் என்பவர் வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக செந்தில்குமார் மற்றும் பாக்கியராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று செந்தில்குமார் கடையை கவனித்துகொண்டு இருந்தபோது காரமடை பகுதியை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன் (வயது 22), காரமடை மரியபுரம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்கிற ஞானராஜ் (வயது27), மரியபுரம் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது47) ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் செந்தில் குமார் கடைக்கு வந்துள்ளனர். அப்போது, செந்தில்குமாரை வம்புக்கு இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.



மேலும், அவரிடம் பட்டா கத்தியை காட்டி யாரிடம் காசு கேட்கிறாய் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் இதுகுறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காரமடை காவல் ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் சுல்தான் இப்ராகிம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...