யானைகள் பராமரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி - முதுமலை புலிகள் காப்பக யானை பாகன்கள் உட்பட 8 பேர் தாய்லாந்து பயணம்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள யானை பாகன்கள், காவடிகள் மற்றும் கால்நடை ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் தாய்லாந்தில் நடைபெறும் யானைகளை பராமரிப்பது குறித்த சிறப்புப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர். இதற்காக அவர்கள் அனைவரும் தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. யானைகளை பராமரித்து, வளர்க்கும் பணிகளில் இங்குள்ள இருளர், குரும்பர் பழங்குடியின மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



இவர்கள் தங்களுக்கு என்று ஒரு யானையை தேர்வு செய்து பராமரித்து வருகின்றனர். இவர்களின் சொல்லுக்கு யானைகள் கட்டுப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் ஒரு பாகன், ஒரு காவடி என்றழைக்கப்படும் உதவியாளர்கள் உள்ள நிலையில் இங்குள்ள பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு யானை வளர்ப்பில் பல புதிய யுக்திகளை கையாளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.



இதற்காக 4 யானை பாகன்கள் 3 காவடிகள், ஒரு வன கால்நடை ஆய்வாளர் என 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.



இவர்களை தாய்லாந்து நாட்டுக்கு அனுப்ப தமிழக அரசு 40 லட்சம் ரூபாயை ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில், வன கால்நடை ஆய்வாளர் ரமேஷ், யானை மாவுத்கள் சுரேஷ், T.M பொம்மன், C.M பொம்மன், காவடிகள் குள்ளன், கேத்தன், சிவன், காலன் ஆகிய 8 பேர் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று தாய்லாந்து செல்கின்றனர்.

தாய்லாந்தில் உள்ள தாய் வளர்ப்பு யானைகள் முகாமில் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இவர்கள் 8 பேரும் தங்கி, உலக அளவில் கும்கியானைகள் எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்த பயிற்சி மற்றும் யுக்திகள் கற்றுக்கொள்ளவுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...