மாய குரல் மறைந்தது..! - பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பின்னணி பாடகி வாணி ஜெயராம், இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், இசை ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் காலமானார். அவரது மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



“மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற தனது முதல் பாடலிலேயே அனைவரையும் மயங்க வைத்த மாய குரல் வாணி ஜெயராமின் குரல் தான். ஆம் தனது முதல் பாடலிலேயே தமிழ் நெஞ்சங்களை காதல் கொள்ள வைத்து முன்னணி பாடகியாக வலம் வந்தார்.

அதன் பின்னர், ஏழு சுவரங்களுக்குள், ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் போன்ற பாடல்களால் பல்வேறு உணர்வுகளை கடத்தியது என்றால் அது மிகையல்ல...

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'குட்டி' என்ற படத்தில் இடம்பெற்ற 'போலே ரே பப்பி ஹரா' என்ற பாடலை பாடி சினிமாவில் அறிமுகமான இவர், அடிப்படையில் ஒரு தமிழ் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் பிரபலமான பாடகியாக மாறிய வாணி ஜெயராம், தமிழ் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு “தீர்க்கசுமங்கலி” ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய “மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும்” பாடல் மூலமாக அறிமுகமானார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல்கள் மூலம் இந்திய இசையுலகில் தவிர்க்க முடியாத குரலாக திகழ்ந்த வாணி ஜெயராம். தனது இனிமையான குரலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.



வாணி ஜெயராம், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும், பல்வேறு மாநில விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் அவருக்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று அவரது வீட்டில் வேலை செய்யும் பெண், வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது கதவை திறக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வாணி ஜெயராம் தலையில் அடிப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...