சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு 3.73 கிலோ தங்கம் கடத்தல் - 2 பெண்கள் உட்பட மூவர் கைது!

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் ரூ.2.19 கோடி மதிப்பிலான, 3.73 கிலோ அளவிலான தங்கத்தை உள்ளாடைகள் மற்றும் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.


கோவை: கோவை விமான நிலையத்தில் 2.19 கோடி மதிப்பிலான 3.73 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஸ்கூட் விமான பயணிகளின் உடைமைகளை மத்திய சிறப்பு வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (34), கோவையை சேர்ந்த பிரியா(36) மற்றும் ஶ்ரீமதி (29) ஆகியோரை ஆய்வு செய்த போது, உள்ளாடைகள், மற்றும் மலக்குடலில் தங்க நகைகள், தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்த ரூ.2.19 கோடி மதிப்பிலான சுமார் 3.73 கிலோ தங்கங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...