பல்லடத்தில் தொடரும் பைக் திருட்டு - திருடர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார்!

பல்லடத்தில் இரவு நேரங்களில் பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இரவுநேர ரோந்து பணிகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடுபோகும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ராயர்பாளையம், வெங்கடாபுரம், பச்சாபாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் திருடு போவது தொடர் கதையாகி வருகிறது.

திருடர்கள் இருசக்கர வாகனங்களின் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பல்லடம் பச்சாபாளையத்தில் வசித்து வரும் நிகில் என்பவர் தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.



காலையில் எழுந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிகில், பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று நேற்றிரவு பல்லடம் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறமாக வசித்து வரும் வேலுச்சாமி என்பவரது இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.



மேலும் வேலுச்சாமி வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு வாகனங்களை உடைக்க முயன்று உடைக்க முடியாததால் வேலுச்சாமியின் வாகனத்தை மட்டும் திருடி சென்றுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக ஏழு இடங்களில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் திருடப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும் திருடர்களை பிடிக்க முடியாமல் பல்லடம் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், பல்லடம் முழுவதும் போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...