கோவை அருகே தாய் திட்டியதால் மகள் தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் சோகம்!

கோவை விளாங்குறிச்சி அருகே கல்லூரி மாணவி ஒருவரை, தாய் வீட்டு வேலை செய்ய சொல்லி திட்டியதால், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் தாய் திட்டியதால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் கங்கா, இவரது மகள் காயத்ரி (23) சி.ஏ. படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி தாய் கங்கா மகள் காயத்ரியை திட்டியதாக தெரிகிறது.

இதன் காரணமாக விரக்தியில் இருந்த காயத்ரி வீட்டின் படுக்கை அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து தாய் கங்கா கதவை திறக்க முயன்ற போது திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது மகள் காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் காயத்ரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய் வீட்டு வேலை செய்ய சொல்லி திட்டியதால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...