மேட்டுப்பாளையம் அருகே மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்!

மேட்டுப்பாளையம் சாலை ஏ.வி.பி.பள்ளி அருகே சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த தர்ஷன் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மின்கம்பம் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் சுதர்சன், இவரும் இவரது நண்பர் தர்சன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் ஏ.வி.பி.பள்ளி அருகே வந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த தர்சன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...