வால்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி உயிரிழந்த நீல வால் கருமந்தி

வால்பாறை அருகே சோலையாறு அணை செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி நீலவால் கருமந்தி உயிரிழந்த நிலையில், வாகனங்கள் கவனமாக செல்லும்படி வனத்துறை எச்சரிக்கை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி நீலவால் கருமந்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை பகுதியில் வன விலங்குகள் அதிகம் உள்ளன. இதில் அரிய வகையான சிங்கவால் குரங்கு உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனை தனியார் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும், வனத்துறையினரும் பாதுகாத்து வருகின்றனர்.



இதனிடையே, வால்பாறையிலிருந்து சோலையார் அணை செல்லும் வழியில் சேடல் அனை அண்ணா நகர் பகுதியில் சாலையை கடக்க வந்த நீல வால் கருமந்தி, அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி அடிபட்டு இறந்து கிடந்துள்ளது.



இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீலவால் கருமந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

இந்நிலையில், வால்பாறை வனப்பகுதி சாலையில் வாகனங்கள் வரும் பொழுது மெதுவாகவும் கவனமாகவும் செல்லும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...