தாராபுரம் அலங்கியத்தில் சுமை தூக்கும் தொழிலாளர் விடுதலை முன்னணி கொடி ஏற்றும் நிகழ்ச்சி

அலங்கியம் அருகேயுள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு முன்பாக வி.சி.க.வின் துணை அமைப்பான சுமைதூக்கும் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பின் பெயர் பலகை, கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சுமை தூக்குவோர் தொழிலாளர் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பெயர் பலகை மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.



தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியில் திருப்பூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சுமை தூக்குவோர் தொழிலாளர் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பெயர் பலகையும், தொழிலாளர் விடுதலை முன்னணியின் கொடியும் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முன்பாக திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நா. தமிழ்முத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர்கள் சுசி கலையரசன், வளவன், வாசுதேவன், மற்றும் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவையின் மாநில துணை செயலாளர் கிப்டன் டேவிட் பால் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,



அலங்கியம் கிராமத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தொழிலாளர்கள் ஒன்றாக இணைந்து இன்று விடுதலை சிறுத்தை கட்சியின் துணை அமைப்பான தொழிலாளர் விடுதலை முன்னணி என்கிற தலைமை அமைப்போடு சுமை தூக்கும் தொழிலாளர் விடுதலை முன்னணி என்கின்ற அந்த அமைப்பில் இணைந்துள்ளனர்.

அந்த அமைப்பினுடைய பொறுப்பாளராக கணேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் 30க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் இணைந்துள்ளனர். இவர்களை விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில், பாராட்டி வாழ்த்தி அவர்களுக்கு பணி ஏற்பு செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், சுமைதூக்கும் தொழிலாளர்கள் தமிழகத்தில் அனைத்து பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர்களை இணைக்கப்பட வேண்டும் என இதன் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் காங்கிரஸ் பேரியக்கத்தினுடைய இ.வி.கே.எஸ் இளங்கோவன், தனது மகன் இறந்துவிட்ட இடத்தை நிறைவு செய்யும் வகையில், தேர்தல் களத்தில் இருக்கிறார்.

கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற சிறப்பு செயற்குழுவில் பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த வகையில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெருவார் என நம்பிக்கை களப்பணிகளில் தெரிகிறது. மக்கள் அவரை ஆர்வமாக வரவேற்று வாக்களிக்க காத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் இவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவார் என விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...