கோவை சூலூரில் தடையை மீறி மதுவிற்பனை - காவல்துறை சோதனைக்கு பயந்து ஆன்லைனில் பணம் வசூல்..!

தைப்பூசத்தை முன்னிட்டு கோவையில் உள்ள அரசு மதுபான கடைகள் செயல்பட விதிக்கப்பட்ட தடையை மீறி சூலூரில் சட்டவிரோதமாக 2 பார்களில் நடைபெறும் மதுவிற்பனையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.



கோவை: கோவை சூலூரில் ஆட்சியரின் உத்தரவை மீறி மதுவிற்பனை நடைபெறுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் இன்று அரசு மதுபானக்கடைகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற பார்களில் மதுபானங்கள் விற்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



இந்நிலையில் சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடைகளான கடை எண் 2212 மற்றும் 2267 ஆகிய கடைகளில் இயங்கும் பார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.



சட்டவிரோதமாக விற்கப்படும் மது பாட்டில்களுக்கான பணத்தை கூகுள்பே மற்றும் paytm ஸ்கேனர் வைத்து வசூல் செய்யும் நிகழ்வும் அரங்கேறி வருவதாகவும் தெரிகிறது.



டிஜிட்டல் முறையில் பணத்தை பெற்றுக் கொண்டால் திடீரென காவல்துறை ஆய்வு மேற்கொண்டாலும் பணமாவது தப்பிக்கும் என்ற நம்பிக்கையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் இருப்பவர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.



இவ்வாறு சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுவோர் 150 ரூபாய் விற்கக்கூடிய ஒரு மது பாட்டிலை 300 முதல் 400 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...