தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை திறமையான அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது - நடிகை அமிர்தா

கோவை மருதமலை சாலையில் உள்ள தனியார் நகை கடையை திறந்து வைத்த பின் பேசிய நடிகை அமிர்தா, தெலுங்கில் ஹனுமன் திரைப்படத்தில் நடித்து வருகிறேன், தமிழில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறேன் என்றார்.



கோவை: கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூரில் தனியார் நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது.



இதில் பிகில் பட நடிகை அமிர்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் நடிகை அமிர்தா பேசியதாவது,



தற்போது ஹனுமன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். தமிழ் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன்.

தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமை உள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. கோவைக்கு நான் சிறுவயதிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். கல்லூரி படிக்கும் போது பலமுறை கோவை வந்துள்ளேன்.

ஒவ்வொரு முறையும் வரும் போதும் புது அனுபவமாக உள்ளது. எனக்கு கோவை உணவு என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் கோவை உணவை ருசிப்பதில் ஆர்வமாக இருப்பேன். நேற்று வந்த போது ஒரு இனிப்பு வகை சாப்பிட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...