பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது - தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், இந்தியாவை இந்து நாடாக, அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு பாஜக படிப்படியாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.


சென்னை: பொது சிவில் சட்டத்தை தனிநபர் மசோதாவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



சென்னை ஆலந்தூர் மண்டித் தெருவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது,



சங்பரிவார் கொட்டம் தலை விரித்தாடுகிறது. ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் அதனை கண்டித்து திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். அண்மையில் மாநிலங்களைவில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்து விவாதத்திற்கு உட்படுத்தினார்கள்.

ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் வெள்ளி கிழமை 2 மணிக்கு மேல் தனிநபர் மசோதா தாக்கல் செய்யலாம். அரசாங்கம் மசோதாவை தயார் செய்யும், அனைவரின் மசோதாவும் எடுத்து கொள்ளப்படுமா என்றால் எடுத்துக்கொள்ளப்படாது.



இத்தனை ஆண்டு காலத்தில் இரண்டு முறை தான் தனி நபர் மசோதா சட்டமாகி இருக்கிறது. மற்றவை சட்டமாக்கப்படுவது இல்லை. ஆட்சியாளர்கள் விரும்பினால் ஒரு நாள் மசோதாவை கொண்டு வருவார்கள்.

பாஜகவை சேர்ந்த ராஜஸ்தான் உறுப்பினர் 2020-ல் தாக்கல் செய்த மசோதா அண்மையில் விவாதத்திற்கு வந்தது. பொது சிவில் சட்டம் மாநிலங்களைவில் நடந்தது. அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்பரிவார் அமைப்புகள் வெவ்வேறு பெயர்களில் அதிகம் இருந்தாலும் ஒரே செயல் திட்டம் தான்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அங்கம் வகிக்ககூடிய குழு புதிய அரசியலமைப்பு சட்டத்தை 32 பக்கத்தை முன்னோட்ட அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள். 2024ல் மீண்டும் மோடி பிரதமரானால் அமல்படுத்த போகும் அரசியலமைப்பு சட்டம் இது தான்.



இவர்கள் இலக்கு ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டம் தான். அவர்களின் இலக்கு இந்தியாவை இந்து மதம் சார்ந்த நாடாக, இந்து ராஷ்டிரா என அறிவிக்க வேண்டும். அதற்கு முன் நிபந்தனையாக சிலவற்றை செய்ய வேண்டும்.

பாபர் மசூதி இடிப்பது, ஜம்மு காஷ்மீரில் 370 சட்ட பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டம், அண்டை நாடுகளில் இருந்து வந்தால் குடியுரிமை பறிப்பு. அகதிகளில் இஸ்லாமியர்கள் இருந்தால் குடியுரிமை தருவதில்லை.

இறுதி இலக்கு அரச மதமாக இந்து மதம் இருக்க வேண்டும். இதற்கு தடையாக இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் தான். ஒவ்வொரு கனவு திட்டங்களை நிறைவேற்றி படிப்படியாக வருகிறார்கள்.



எஞ்சி இருப்பது பொது சிவில் சட்டம் தான். அதையும் நிறுவி விட்டால் அரசியலமைப்பு சட்டம் நீர்த்து போகும்.

புரட்சியாளர் அம்பேத்கர் 65 வயதில் இறப்பதற்கு அவரது கடின உழைப்பே காரணம். அரசியல் நிர்ணய சபை தான் அப்போதைய சபை, குடியரசு தலைவர் தலைமையில் கூடும். அம்பேத்கரிடம் அரசியலமைப்பு சட்டம் குறித்து கடுமையான விளக்கங்கள் கேட்டார்கள் கடைசியாக முழுமையாக ஏற்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...