கோவை மேட்டுப்பாளையத்தில் திருட்டு: ஈரோட்டில் விபத்து - சிக்கிய கொள்ளையன்

மேட்டுப்பாளையம் அடுத்த பங்களாமேடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பது சவரன் தங்க நகைகளை திருடிச்சென்ற கொள்ளையன் ஈரோட்டில் விபத்தில் சிக்கி போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் ஈரோட்டில் விபத்தில் சிக்கி போலீசாரிடம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அடுத்த பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் அதே பகுதியில் ஹோட்டல் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கார்த்திக் ஹோட்டலை கவனிக்க வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், வீட்டில் வைத்திருந்த ஒன்பது சவரன் நகையை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற கார்த்திக் வீட்டின் பூட்டு உடைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த ஒன்பது சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து கார்த்திக் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக் வீட்டில் கொள்ளையடித்த நபர் இங்கிருந்து தப்பி ஈரோடு சென்று அங்கு ஒரு பிக்கப் வாகனத்தை திருடி சென்றுள்ளார்.

அந்த வாகனம் ஈரேட்டில் திடீரென சாலை ஓரத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் ஈரோடு டவுன் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் விபத்தில் சிக்கிய வாகனத்தில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

அது குறித்து விசாரித்த போது விபத்தில் சிக்கிய நபர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சுந்தரவேல் என்பதும், தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இவர், மேட்டுப்பாளையத்தில் நகைகளை திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த சுந்தரவேலை போலீசார் மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை முடிந்தவுடன் கைது செய்தனர்.

இது குறித்து ஈரோடு போலீசார் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுந்தரவேல் நகைகளை திருடி செல்வது சிசிடிவியில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...