கடலுக்குள் பேனா சின்னம் அமைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் - கிருஷ்ணசாமி கருத்து

தமிழக அரசின் சார்பில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியை முற்றிலுமாக கைவிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


சென்னை: மக்களின் வரிப்பணத்தில் நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கு அரசு முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் பெரும்பாலும் இலவசங்கள் தான் அதிகமாகப் பிரதிபலிக்கும்.

ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில், அதற்கு மாறாக வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் 50 புதிய விமான நிலையங்கள் உருவாக்குதல், ரயில்வே துறையை மேம்படுத்துதல் என்று பல்வேறு சிறப்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக இருக்கக்கூடிய அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வார காலத்தில் மிகப்பெரிய சரிவைக் கண்டிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை காரணமாக இந்த சரிவை அந்த குழுமம் சந்தித்திருக்கிறது. இது சர்வதேச அளவில் ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் சரிவு என்பதை விட, இந்தியாவின் நன்மதிப்பைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட துறைகள் இதுபோன்ற பெரும் குழுமங்களின் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க வழிவகை செய்ய வேண்டும்.

பேனா நினைவுச் சின்னம் மக்களுக்குப் பயன் தரக்கூடியது அல்ல, எனவே தமிழக அரசின் சார்பில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியை முற்றிலுமாக கைவிட வேண்டும், அதுமட்டுமில்லாமல் தமிழகத்தின்வேறு எந்த பகுதியிலும் மக்களின் வரிப்பணத்தில் நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கு மாநில அரசு முயற்சிகளை மேற்கொள்ள கூடாது. அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...