தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ பாகுபாடு பார்க்க கூடாது - சத்குரு ட்வீட்‌

தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ பாகுபாடு பார்க்க கூடாது என தென்முடியனூர்‌ சம்பவம்‌ தொடர்பாக சத்குரு ட்வீட்‌.



கோவை: தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ மனிதர்களுக்கிடையே பாகுபாடு பார்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்‌ என சத்குரு தெரிவித்துள்ளார்‌.

திருவண்ணாமலை மாவட்டம்‌ தென்முடியனூர்‌ கிராமத்தில்‌ உள்ள முத்துமாரியம்மன்‌ கோவிலுக்குள்‌ தலித்‌ மக்கள்‌ செல்ல கடந்த 80 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல்‌ இருந்தது. இதையடுத்து, அந்தப்‌ பகுதியை சேர்ந்த தலித்‌ மக்கள்‌ மாவட்ட ஆட்சிரியரிடம்‌ இது குறித்து புகார்‌ அளித்தனர்‌.

இதை தொடர்ந்து கடந்த வாரம்‌ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ காவல்துறை அதிகாரிகளின்‌ முன்னிலையில்‌ தலித்‌ மக்கள்‌ 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்‌ முறையாக முத்துமாரியம்மன்‌ கோவிலுக்குள்‌ நுழைந்து வழிபாடு செய்தனர்‌.

இச்சம்பவம்‌ தொடர்பாக சத்குரு அவர்கள்‌ தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள பதிவில்‌, “தெய்வீகமும்‌ பாகுபாடும்‌ ஒன்றாக இருக்க முடியாதவை. தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ மனிதர்களுக்கிடையே நாம்‌ பிரித்துப்‌ பார்ப்பதே வெட்கப்பட வேண்டிய விஷயம்‌. யார்‌ தலீத்‌ யார்‌ இல்லை என்று நாம்‌ யோசிக்கவே கூடாது. தென்முடியனூருக்கு வாழ்த்துக்கள்‌” என தெரிவித்துள்ளார்‌.



ஈஷாவில்‌ உள்ள தியானலிங்கம்‌ மற்றும்‌ லிங்க பைரவியில்‌ துவக்கம்‌ முதலே அனைத்து தரப்பு மக்களும்‌ எந்த வித பாகுபாடின்றி அனுமதிக்கப்படுகின்றனர்‌. மேலும்‌ அமாவாசை, பவுர்ணமி நாட்களில்‌ யார்‌ வேண்டுமானாலும்‌ தியானலிங்கத்திற்கு பால்‌ மற்றும்‌ தண்ணீர்‌ அபிஷேகம்‌ செய்யும்‌ வாய்ப்பும்‌ வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...