லிங்கபைரவியில்‌ தைப்பூச திருவிழா கோலாகலம்‌ - ஏராளமான பெண்கள் பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவியில்‌ தைப்பூச திருவிழா கோலாகலம்‌ நூற்றுக்கணக்கான பெண்கள்‌ முளைப்பாரி யாத்திரை.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவியில் தைப்பூசத் திருவிழா இன்று மிக கோலாகலமாக நடைபெற்றது. கள்ளிப்பாளையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலவாக வந்து தேவியின் அருளை பெற்றனர்.

கோவை ஈஷாவில்‌ உள்ள லிங்கபைரவியில்‌ தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.



நூற்றுக்கணக்கான பெண்‌ பத்தர்கள்‌ கள்ளிப்பாளையத்தில் இருந்து முளைப்பாரிகளை தலையில்‌ ஏந்தி லிங்கபைரவிக்கு பாத யாத்திரையாக வந்து தரிசனம்‌ செய்தனர்‌.

இந்த யாத்திரையில்‌, உள்ளூர்‌ கிராம மக்கள்‌ மட்டுமின்றி, வெளியூர்‌ மற்றும்‌ வெளிநாட்டைச்‌ சேர்ந்த பக்தர்களும்‌ ஜாதி, மத பாகுபாடு இன்றி கலந்து கொண்டனர்‌.



ஆண்கள்‌ கரகம்‌ ஏந்தி முன்‌ செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின்‌ உருவம்‌ வடிவமைக்கப்பட்ட தேர்‌ ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.



ஆலாந்துறையை அடுத்த கள்ளிப்பாளையத்தில்‌ இருந்து காலை 6.30 மணி புறப்பட்ட இந்த யாத்திரை நண்பகல்‌ 12 மணியளவில்‌ லிங்கபைரவியை வந்தடைந்தது.



வரும்‌ வழியில்‌ ஆலாந்துறை, மத்வராயபுரம்‌, இருட்டுப்பள்ளம்‌, செம்மேடு என பல்வேறு இடங்களில்‌ அங்குள்ள கிராம மக்கள்‌ சிறப்பான வரவேற்பு அளித்தனர்‌.



இது தவிர, தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள்‌ கடந்த 21 நாட்கள்‌ சிவாங்கா விரதம்‌ மேற்கொண்டனர்‌. அவர்கள்‌ அனைவரும்‌ இன்று லிங்கபைரவிக்கு வந்து தேங்காய்‌, தானியங்கள்‌, நெய்‌ தீபம்‌ உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்‌.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...