ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - ஜவாஹிருல்லா நம்பிக்கை

திருப்பூரில் நடைபெற்ற மனிதநேய தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்திற்கு பின் பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பாஜகவிடம் தன்னை அடமானம் வைத்துள்ள அதிமுக கட்சி குழப்ப நிலையில் உள்ளது என கூறினார்.


திருப்பூர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.



திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனிதநேய தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா பேசியதாவது, மத்திய அரசு 44 வகையான சட்டங்களை நீக்கி பெரும் தொழிற்சாலை முதலாளிகளுக்கு ஆதரவாக 4 தொகுப்பு சட்டங்களைக் கொண்டு வந்திருப்பதை மனிதநேய தொழிலாளர் சங்கம் எதிர்க்கிறது.

தமிழகத்தில் வீட்டுப் பணியாளர்களுக்கு சமூக பணி பாதுகாப்பு, ஊதிய நிர்ணயம், வார விடுமுறை ஆகியவற்றைத் தமிழக அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். பாஜகவிடம் தன்னை அடமானம் வைத்துள்ள அதிமுக கட்சி தற்போது குழப்ப நிலையில் உள்ளது.

நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லக்கூடிய திராவிட கொள்கைகளுக்கு எதிராக ஓட்டை பிரிக்க பசுந்தோல் போர்த்திய நபராக நாம் தமிழர் கட்சியின் சீமான், பாஜகவிற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

கோவை ஈஷா யோகா மையம் தொடர்ந்து மர்மமான முறையில் செயல்பட்டு வருவதன் காரணமாக தமிழக அரசு அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டைகளை தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு ஜவாஹிருல்லா வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...