நீலகிரி உதகையில் பட்டப்பகலில் உலா வந்த காட்டெருமை - பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் பட்டப்பகலில் உலா வந்த காட்டெருமையால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சமடைந்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் காட்டெருமை உலா வந்ததால் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வனப்பகுதிகளை ஒட்டி உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டமும் இருந்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குடியிருப்பு பகுதிகள் மட்டுமல்லாமல் நகர்புற பகுதிகளிலும், விவசாய நிலங்களுக்குள்ளும் காட்டெருமைகள் அதிகமாக வருகின்றன.



இதனிடையே தைப்பூச திருவிழாவான இன்று எல்க்ஹில் முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் காட்டெருமை உலா வந்ததால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.



நீண்ட தூரம் சாலையிலேயே நடந்து சென்ற காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றவுடன் பக்தர்கள் நிம்மதி அடைந்து கோவிலுக்குச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...