கோவை துடியலூர் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை - ஒருவர் கைது

துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே அரசு மதுபானங்களை பதுக்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானங்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருச்சந்திர வடிவேல் தலைமையில் போலீசார் வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள புதர் பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்த அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 20 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...