பல்லடம் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருநாளையொட்டி தேர் திருவிழா ஊர்வலம்

பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் முத்துக்குமார சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற தேர் திருவிழாவில் மேளதாளங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள முத்துக்குமார சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது.



பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூச திருநாளை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமத்தோடு தைப்பூசத் திருவிழா தொடங்கியது.



முருகருக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் உச்சிக்கால பூஜைகளோடு தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வாக முத்துக்குமாரசுவாமி உற்சவர் சிலை தேரில் பவனி நடைபெற்றது.



பக்தர்களின் அரோகரா முழக்கத்தோடு வானவேடிக்கைகளுடன், மேள தாளங்கள் முழங்க, முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் கிரிவலப் பாதையில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...