தாராபுரம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி - திருடனை விவசாயி மடக்கி பிடிக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள அலங்கியம் கனரா வங்கியில் துணிவு பட பாணியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை, விவசாயி லாவகமாக மடக்கிப்பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கனரா வங்கி கிளையில் அலங்கியம் காந்தி நகரில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 19). இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.



இந்தநிலையில், துணிவு பட பாணியில் கனரா வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட சுரேஷ், கருப்பு நிற பர்தா அணிந்து கைத்துப்பாக்கி மற்றும் டைம்பாம் எடுத்துக்கொண்டு கனரா வங்கிக்குள் நுழைந்துள்ளார்.



அப்போது, வங்கியில் அமர்ந்திருந்த அலங்கியம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கருணாகரன் (வயது 58) என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய சுரேஷ், பாமை வெடிக்க வைப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.



அப்போது, எதிர்பாராதவிதமாக, சுரேஷ் கையில் வைத்திருந்த கத்தி கீழே விழுந்தது. அதை எடுப்பதற்கு சுரேஷ்க்கு கீழே குனிந்தபோது, சுதாரித்த விவசாயி கருணாகரன் தனது கழுத்தில் அணிந்திருந்த துண்டை எடுத்து சுரேஷின் கையில் மாட்டி லாவகமாக அவரை சுற்றி வளைத்து பிடித்தார்.



இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...