நாராயணசாமி நாயுடுவின் 99வது பிறந்தநாள் விழா - கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மலர் மரியாதை!

தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாராயணசாமி நாயுடுவின் 99வது பிறந்தநாளையொட்டி, கோவை அருகே வையம்பாளையத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே வையம்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமி நாயுடுவின் 99வது பிறந்தநாள் விழா அவருடைய மணிமண்டபத்தில் அரசு விழாவாக நடைபெற்றது.



இதில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று நாராயணசாமி நாயுடுவின் திரு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



இந்த நிகழ்ச்சியின்போது, நாராயணசாமி நாயுடுவின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லத்தை நூலகமாக மாற்ற வேண்டும் மற்றும் மணிமண்டபத்தின் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:



விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த விவசாயப் பெருமக்களின் தோழனாக அவர்களுடைய கோரிக்கைக்கு முன் நின்று போராடிய நாராயணசாமி நாயுடுவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அரசு விழாவாக கொண்டாடியுள்ளோம்.

பல்வேறு விவசாய திட்டங்கள் கொண்டு வருவதற்கு முன்னோடியாக திகழ்ந்த அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தப் பகுதியில் அவரது மணிமண்டபத்தில் நுழைவாயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள். அவர் வாழ்ந்த இல்லத்தை நூலகமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். வருகிற ஆண்டு நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு, அனைத்து விவசாய தரப்பினரையும் சென்றடையும் வகையில், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு முதல்வரிடம் தெரிவித்து இதை சிறப்பாக கொண்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையை பொறுத்தவரை விவசாயிகளின் உந்து சக்தியாக இருந்து, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வென்றெடுக்க முன்நின்றவர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்". இவ்வாறு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, மாவட்ட கவுன்சிலர் அபிநயா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, நாராயணசாமி நாயுடுவின் குடும்பத்தார், கோவை தெற்கு ஆர்டிஓ பண்டரிநாதன், அன்னூர் தாசில்தார் தங்கராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...