ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - பறக்கும்படை தீவிர வாகனத் தணிக்கை!

ஈரோடு கிழக்கு சட்மன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட 18ஆம் தேதி முதல் ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் 3 பறக்கும் படை மற்றும் 4 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையிலே 4 நிரந்தர சோதனை சாவடி மற்றும் 35 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசாரும் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 350 போலீசார் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வரும் வாகனங்களின் பதிவு எண்கள், ரிஜிஸ்டரில் பதிவு செய்யப்பட்ட பிறகே தொகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

முக்கியமாக, பன்னீர்செல்வம் பார்க், அக்ரஹாரம், மூலப்பட்டறை, சூளை, சக்திரோடு, வீரம்ப்பம் பாளையம், குமலன் குட்டை, கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களில் வருபவர்களின் உடமைகளும் சோதனையிடப்படுகின்றன.

தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்கவும் தேர்தல் விதிகளை கண்காணிக்கவும் தீவிர வாகன தணிக்கை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் பணம் பட்டுவாடா தலைவிரித்தாடும் என்பதனால் பறக்கும் படையினரின் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...