பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் பொம்மலாட்டம் - ஆர்வத்துடன் கண்டுகளித்த திருப்பூர் மாணவிகள்!

திருப்பூரில் உள்ள பழனியம்மாள் அரசுப்பள்ளியில் வளரிளம் பெண்களின் தொடர் கல்வியின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு பொம்மலாட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியை ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.



சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம், பொம்மலாட்ட கலைக்குழுவினர் சார்பில், வளரிளம் பெண்களின் தொடர் கல்வி மற்றும் பாதுகாப்பை எடுத்துரைக்கும் விதமாக பொம்மலாட்ட கலைப்பயணம் திருப்பூரில் இன்று தொடங்கியது. இந்த கலைப் பயணமானது, வரும் 12ஆம் தேதி தேனியில் நிறைவடைய உள்ளது.

இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி போன்ற தொழில் நகரங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் ஆடை உற்பத்தி தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு வளரிளம் பருவத்தினர் சென்று வருகின்றனர்.



இதனால், பள்ளி இடை விலகல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக, திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற பொம்மலாட்ட நிகழ்ச்சியின் மூலம் மாணவிகளுக்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியை, ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...