பல்லடத்தில் செய்தியாளர்கள் எனக் கூறி பார் உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் செய்தியாளர்கள் என்ற பெயரில் உலாவரும் போலி நபர்கள், பார் உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவர் மங்கலத்தில் அரசு மதுபானக்கடைக்கு சொந்தமான பாரை ஏலத்திற்கு எடுத்து நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களாக RNI மூலம் பதிவு பெற்ற பத்திரிகையில் இருந்து பேசுகிறோம் எனவும்.

நீங்கள் சட்டவிரோதமாக அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி மது பாட்டில்கள் விற்பனை செய்கிறீர்கள் எனவும் கூறிய நபர்கள், இதுகுறித்து நாங்கள் செய்தி வெளியிடாமல் இருக்க, எங்களுக்கு மாதாமாதம் 100 ரூபாய் மட்டும் கொடுத்தால்போதும் எனவும் கூறியுள்ளனர்.



பத்திரிகையாளர்கள் எனக் கூறி போனில் பேசிய நபர்களை நேரில் வரச்சொன்ன சுந்தர், அவர்களிடம் நீங்கள் எந்த பத்திரிகையில் செய்தியாளராக உள்ளீர்கள் எனவும் உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் எனவும் கேட்டுள்ளார்.



நாங்கள் அரசின் RNI பதிவு பெற்ற ஆன்லைன் வலைதளம் மற்றும் மாத இதழ் பத்திரிக்கையில் செய்தியாளர்களாக பணியாற்றுகிறோம் எனவும், தங்களது அடையாள அட்டையை காட்டி விசிட்டிங் கார்டையும் சுந்தரிடம் கொடுத்துள்ளனர்.

அந்த இரண்டு நபர்களும் தலைக்கு நூறு ரூபாய் பணம் வாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



அவர்கள் அளித்த விசிட்டிங் கார்டில் இருந்த RNI எண்களை இணையதளத்தில் தேடிப் பார்த்தபோது இரண்டு பத்திரிகைகளின் RNI எண்களும் போலியானது என்பது தெரியவந்துள்ளது.

பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் பார்களில் 100 ரூபாய் வீதம் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தி வரும் மர்ம ஆசாமிகள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...