கோவை வாலாங்குளத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த இளைஞரிடம், புகைப்பிடிப்பதை விடும்படி குடும்பத்தினர் கண்டித்தால் வாலாங்குளத்தில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். அவரது சடலம் மீட்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவை வாலாங்குளத்தில் இறந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை அடுத்த கரும்புக்கடை ஆசாத் நகர் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் சலீம் (52), இவரது மகன் முகமது ஹனிபா (29) காய்கறி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், முகமது ஹனிபா மன உளைச்சல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் புகைபிடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டதாக தெரிகிறது.

இதையறிந்த தந்தை சலீம் புகை பிடிக்கக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த முகமது ஹனிபா கடந்த 3ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் தந்தை சலீம் மகனை காணவில்லை என ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத இறந்த உடல்கள் உள்ள கோவை அரசு மருத்துவமனை பிரேத அறையில் ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் முகமது ஹனிபா உடல் இருந்தது தெரியவந்தது. மேலும் கடந்த நான்காம் தேதி அவர் வாலாங்குளத்தில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முழுமையான விசாரணைக்கு பின் முகமது ஹனிபாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...