மேட்டுப்பாளையம் அருகே சின்னக்கள்ளிப்பட்டி மக்களின் முயற்சி - புதிய அஞ்சலக்கிளை கட்டிடம் திறப்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை அருகே சின்ன கள்ளிப்பட்டியில் ஊர் பொதுமக்கள் சார்பில் கட்டப்பட்ட அஞ்சலக கிளை கட்டிடத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிறுமுகை துணை அஞ்சலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சின்ன கள்ளிப்பட்டி கிளை அஞ்சலக அலுவலகத்திற்கு கட்டிட வசதி இல்லாமல் இதுவரை வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது ஊர் பொதுமக்கள் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.



அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



இந்த கட்டிடத்தை சின்ன கள்ளிப்பட்டி ஊர்த்தலைவர் ஆர். சுரேஷ் தலைமையில் எஸ்.டி. ராமசாமி, ராஜன், கெம்பத் திருமன், சின்னராஜ், மூர்த்தி ராஜேந்திரன், வார்டு உறுப்பினர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலையில் மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலைய அதிகாரி நாகஜோதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



அஞ்சலகத்தில் செயல்பட்டு வரும் சேவைகள் குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் தலைமை தபால் நிலைய அதிகாரி நாகஜோதி விளக்கி கூறினார்.

முன்னதாக கிளை அஞ்சல் அதிகாரி செந்தூரா பேசுகையில், 2021 மார்ச்-இல் தபால் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தபோது, அந்தக் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது. பல அஞ்சல் கணக்குகள் செயல்பாடின்றி முடங்கியிருந்தன. இதையடுத்து, தபால் கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு அஞ்சல் சேவைகள் குறித்து உதவி கிளை தபால் மாஸ்டர் ஜி.சிந்து பார்கவியுடன் இணைந்து சின்னக்கல்லிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான நாதேகவுண்டன்புதூர், கல்லக்கரை, கருப்பகவுண்டன்புதூர் ஆகிய கிராமங்களில் நான் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டேன்.

அப்போது, தபால் நிலைய கட்டிடத்தின் நிலை குறித்து மக்களிடம் தெரிவித்தோம். தபால் நிலையத்திற்கான கட்டிடத்தை கட்டித்தருமாறும் கோரிக்கை விடுத்தோம். இந்த பிரச்சாரத்தின் மூலம் சுமார் 250 புதிய கணக்குகள் உருவாக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, கிராம மக்கள், அஞ்சலத்திற்கு புதிய கட்டிடம் கட்டவும் முடிவு செய்தனர்.

அதனிடையே, மோசமான கட்டிடத்தில் செயல்பட்டுவந்த அஞ்சல் அலுவலகத்தை வாடகை இல்லாமல் கிராமத்தில் உள்ள ஒரு தற்காலிக கட்டிடத்திற்கு மாற்ற மக்கள் உதவினார்கள். அதன்பின்னர், கிராமத் தலைவர், மக்களை ஒருங்கிணைத்து, தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடத்தை கட்டினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முயற்சி குறித்த கிராம தலைவர் ஆர்.சுரேஷ்," கோவை, ஈரோடு மாவட்ட எல்லையில் எங்கள் கிராமம் அமைந்துள்ளதால், அஞ்சல் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால் கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக பொதுமக்களிடம் கூட்டம் நடத்தி, தபால் நிலையத்தின் நிலையை விளக்கி, சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் திட்டமிட்டு ஆறு மாதத்திற்குள் கட்டடத்தை கட்டி முடித்தோம். தேவையான தண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது, என்றார்.

தபால்துறை உயர் அதிகாரி பேசுகையில்,"கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான கிளை அஞ்சலகங்கள் வாடகை இடங்களில் செயல்பட்டுவருகின்றன. தபால் நிலைய அலுவலர்கள் தங்கள் பாக்கெட்டில் இருந்துதான் வாடகைத் தொகையை கொடுக்க வேண்டும். ஆனால், கிளை தபால் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு, என்றார்.



இந்த நிகழ்ச்சியில் சின்னக் கள்ளிப்பட்டி ஊராட்சித் தலைவர் எஸ். டி. ரங்கசாமி தபால் துறை உதவி கண்காணிப்பாளர் அசோக் குமார், மெயில் ஓவர்சியர் பொன் மாணிக்கம், சிறுமுகை அருள் பிரகாஷ் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...