உதகையில் ஆட்டோ ஒட்டுநர் மீது போலீஸ் தாக்குதல் - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

நீலகிரி மாவட்டம், ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய காவல் ஆய்வாளரை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம். நீதிகேட்டு காவல் நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டதால் பரபரப்பு.


நீலகிரி: உதகையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய போலீசாரை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உதகை படகு இல்லம் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி அருகே ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், தனியார் தங்கும் விடுதிக்கு தொந்தரவாக இருப்பதாக கூறி அதன் மேலாளர் உதகை G-1காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனை விசாரித்த உதகை G-1 காவல் ஆய்வாளர் பிரியா ஆட்டோக்களை அங்கு நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து ஆட்டோக்களை நிறுத்தி இயக்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல ஆட்டோக்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அந்த வழியாக சென்ற G-1 ஆய்வாளர் பிரியா, ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக கேட்டுள்ளார்.



அப்போது ஆய்வாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வினோத் என்ற ஆட்டோ ஓட்டுநரை ஆய்வாளர் தாக்கி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை இயக்காமல் இன்று காலை G-1 காவல் நிலையத்தின் முன்பு திரண்டனர்.



தகவலறிந்து அங்கு வந்த ஏ.டி.எஸ்.பி மோகன் நிவாஸ் ஆட்டோ சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதுடன், ஓட்டுநரை தாக்கிய விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்து இனி வரும் காலங்களில் இதுபோன்று சம்பவம் நடக்காது என உறுதி அளித்தார்.

அதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக 4 மணி நேரத்திற்கு மேலாக உதகையில் நடைபெற்று வந்த ஆட்டோ ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் திரும்ப பெறப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...