நீலகிரியில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் - பலூன் பறக்கவிட்டு தொடக்கி வைத்த ஆட்சியர்!

நீலகிரி எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் ஆகியோர் பலூன்களை பறக்க விட்டு துவக்கி வைத்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் பலூன்களை பறக்கவிட்டு தொடங்கி வைத்தனர்.



நீலகிரியில் உள்ள எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கியது.



இந்த போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் ஆகியோர் பலூன்களை பறக்க விட்டு துவக்கி வைத்தனர்.



பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் அம்ரித், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் என அனைவரும் பங்கேற்கும் வகையில் கால்பந்து போட்டி, தடகள போட்டி, இறகு பந்து போட்டி, கபடி போட்டி, சிலம்பம், நீச்சல் போட்டி, கிரிக்கெட் போட்டி, ஹாக்கி போட்டி, கையுந்து போட்டி என பல்வேறு போட்டிகள் இந்த மாதம் 24 வரை நடைபெறும்.

அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும், என்றார்.



அதனைதொடர்ந்து பள்ளி அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்தி, அணி தலைவர்களிடம் கால்பந்தினை மாவட்ட ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.



இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, உதகை வட்டாட்சியர் ராஜசேகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் இந்திரா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...