சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள், 2ம்நிலை காவலர் பணிக்கு உடல்தகுதித் தேர்வு - கோவையில் ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

கோவையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாகவுள்ள சிறை காவலர், தீயணைப்பு வீரர்கள், 2 ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது.



கோவை: தமிழகம் முழுவதும் 3,552 சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள், 2ம்நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோவையில் இன்று காலை நடைபெற்றது.



இதில் பங்கேற்குமாறு மேற்கு மண்டலத்தை சேர்ந்த 548 பெண்களுக்கும், 623 ஆண்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.



கோவை பிஆர்எஸ் மைதானத்தில் ஆண்களுக்கும், நேரு ஸ்டேடியத்தில் பெண்களுக்கும் உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.



இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.



நேரு ஸ்டேடியத்தில் நடந்த தேர்வுக்கு இன்று 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 185 பெண்கள் இன்று கலந்துகொண்டனர்.



இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உயரம் அளத்தல் போன்றவை இன்று மேற்கொள்ளப்பட்டது.



இதேபோல், பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் இன்று 400 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்த நிலையில், 316 பேர் மட்டுமே பங்கேற்றனர்.



இவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்த்தல் உயரம் மற்றும் உடல் அளவு அளத்தல், 1500 மீட்டர் உடல் தகுதி ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...