கோவை வேளாண் பல்கலை.யில் முனைவர் பட்டம் பெறும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில், கடந்த பிப். 4 மற்றும்‌ 5 ஆகிய 2 நாட்கள் முனைவர்‌ பட்டம் பெறும் மாணவ மாணவிகளுக்காக 'மூலக்கூறு மாதிரியாக்கம்‌ மற்றும்‌ ஈந்தனைதல்‌' என்ற தலைப்பில்‌ நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 20 மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் "மூலக்கூறு மாதிரியாக்கம்‌ மற்றும்‌ ஈந்தனைதல்‌" என்ற தலைப்பில்‌ முனைவர் பட்டம் பெறும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதுதொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிர்‌ தகவலியல்‌ துறை, தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிரி தொழில்நுட்ப மையம்‌ மற்றும்‌ முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம்‌ ஆகியவை இணைந்து முதுகலை மற்றும்‌ முனைவர்‌ பட்ட மாணவர்களுக்காக பிப்ரவரி 4 மற்றும்‌ 5 ஆம்‌ தேதிகளில்‌ "மூலக்கூறு மாதிரியாக்கம்‌ மற்றும்‌ ஈந்தனைதல்‌" என்ற தலைப்பில்‌ பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

மொத்தம்‌ விண்ணப்பித்த 55 மாணவர்களில்‌ (17 முதுகலை மற்றும்‌ 38 முனைவர்‌), வேளாண்‌ நுண்ணுயிரியல்‌, வேளாண்‌ பூச்சியியல்‌, மரபியல்‌ மற்றும்‌ தாவர இனப்பெருக்கம்‌, தாவர நோயியல்‌, பயிர்‌ வினையியல்‌, பட்டு வளர்ப்பு, நூற்புழுவியல்‌ மற்றும்‌ காய்கறி அறிவியல்‌ உள்ளிட்ட பல்வேறு வேளாண்‌ அறிவியல்‌ துறைகளைச்‌ சேர்ந்த 20 மாணவர்கள்‌ இந்த பயிற்சிக்குத்‌ தேர்ந்தெடுக்கப்பட்டனர்‌.

உயிர்‌ தொழில்நுட்பவியல்‌ துறையின்‌ பேராசிரியை மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ கோகிலா தேவியின்‌ வரவேற்பு உரையுடன்‌ இரண்டு நாள்‌ பயிற்சித்‌ திட்டம்‌ தொடங்கியது.

அதைத்‌ தொடர்ந்து முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலக முதல்வர்‌ (SPGS) மற்றும்‌ தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிர்‌ தொழில்நுட்பவியல்‌ மைய இயக்குனருமான (CPMB&B)முனைவர்‌. ந.செந்தில்‌ தொடக்க உரையாற்றினார்‌. அப்போது சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவு, உயர்மதிப்பீட்டு ஆராய்ச்சிக்‌ கட்டுரைகளை இவளியிடவும்‌ உயிர்‌ தகவலியல்‌ உதவி முக்கிய பங்காற்றுகிறது என்றார்‌.

முதல்‌ அமர்வை, உயிரியல்‌ தரவுத்தளங்கள்‌ மற்றும்‌ அதன்‌ பயன்பாடுகள்‌ பற்றிய விரிவான அறிவை வழங்கிய உதவி‌ பேராசிரியர்‌ (உயிர்‌ தகவலியல்‌) என்‌. பாரதி தலைமையில்‌ நடத்தப்பட்டது. முதல்‌ நாளின்‌ இரண்டாவது அமர்வு, புரத மாதிரியாக்கம்‌ மற்றும்‌ சரிபார்ப்பு அம்சங்கள்‌ சூறித்து உதவிப்‌ பேராசிரியர்‌ (உயிர்‌ தகவலியல்‌) முனைவர்‌ எம்‌.ஜெயகாந்தன்‌ வழங்கினார்.

பிப்ரவரி 5, அன்று, புரதபிணைப்பு தள முன்கணிப்பு, ADMET பண்புகள்‌ மற்றும்‌ ஈந்தனைதல்‌ கட்டமைப்பை மீட்டெடுப்பது பற்றிய விளக்கம்‌ முனைவர்‌. ஆர்‌. கரோலின்‌ நிர்மலா, ஆசிரிய உதவியாளர்‌ (உயிர்‌ தகவலியல்‌) விரிவாக எடுத்துரைத்தார்.

பிற்பகல்‌ அமர்வில்‌, புரத-தசைநார் டாக்கிங்‌ மற்றும்‌ தொடர்பு ஆய்வுகள்‌ பற்றிய உதவிப்‌ பேராசிரியை (உயிர்‌ தகவலியல்‌) முனைவர்‌. ந.சரண்யா, செய்முறை விளக்கமளித்தார்‌. இதைத்‌ தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில், உயிர்‌ தொழில்நுட்பவியல்‌ துறையின்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌. இ.கோகிலா தேவி வரவேற்றார்‌.

முதல்வர்‌ (SPGS) மற்றும்‌ தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிர்‌ தொழில்நுட்பவியல்‌ மைய இயக்குனருமான ( CPMBsB) முனைவர்‌ செந்தில்‌ கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்‌ . உயிர்‌ தகவலியல்‌ உதவிப்‌ பேராசிரியர்‌ பாரதி இரண்டு நாள்‌ பயிற்சி நிகழ்வுகள் குறித்த விரிவரிக்கை அளித்தார்‌.



தேர்வாணையர்‌ முனைவர்‌ பாலசுப்பிரமணி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்‌. பின்னர்‌, இப்பயிற்சி குறித்த கருத்துகளை பங்கேற்பாளர்களிடமிருந்து கேட்டு அறிந்தன. இறுதியாக உயிர்‌ தகவலியல் உதவிப்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ ஜெயகாந்தன்‌ முன்மொழிந்த நன்றியுரையுடன்‌ நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...