கோவை அருகே கஞ்சா சாக்லேட் கடத்திய வடமாநில வாலிபர் கைது!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சோமனூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வட மாநில நபர்கள் மூலமாகக் கஞ்சா சாக்லேட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாகக் கோவை மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவர் கொண்டு வந்த பையில் கஞ்சா சாக்லேட் பாக்கெட்டுகளும், கஞ்சா பொட்டலமும் இருந்தது. அதைப் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், வாலிபரிடம் விசாரித்த போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் (33) என்பதும், பீகார் மாநிலத்திலிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து, கோவையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யக் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் கைதான மகேஷ்குமாரை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கருமத்தம்பட்டி போலீசார் வட மாநில நபர் மீது வழக்குப் பதிவு செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...