தாராபுரத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதைக் கைவிட்டு சத்துணவு திட்டத்துடன் இணைக்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.



திருப்பூர்: தாராபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஒன்றிய துணைத்தலைவர் தலைமையிலும், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் நவீன் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.



இதில், சத்துணவு அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலைப் படியுடன் ரூ.6,750 மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்.



சத்துணவு அங்கன்வாடியில் பணிபுரிபவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து அரசு துறைகளிலும் உள்ள நிரந்தர காலமுறை ஊதியத்திலான காலிப்பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்களை ஒதுக்கி அதில் தகுதி உள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களைப் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தைத் தனியார் வசம் ஒப்படைப்பதைக் கைவிட்டு, சத்துணவுத் திட்டத்தில் இணைத்து சத்துணவு ஊழியர்களே பணியாற்றிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...