ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குசாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கான முதல்கட்ட பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் போது வாக்குச்சாவடியில் உள்ள பணியாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.



ஈரோடு மாவட்டம் ரங்கம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மொத்தம் 238 வாக்கு சாவடிகளில் பணியமர்த்தப்பட உள்ள 1206 அலுவலர்கள் இந்த முதல்கட்ட பயிற்சியில் பங்கேற்றனர்.



இதில் EVM இயந்திரம் கையாளுதல், வாக்கு சாவடிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 பேர் பணியில் ஈடுபடுவர், கூடுதல் வாக்காளர்கள் உள்ள 52 பூத்களில் மட்டும் கூடுதலாக ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் இதே போல் மொத்தம் 4 கட்ட பயிற்சிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...