கோவையில் ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 120 கிலோ வெடி பொருட்கள் அழிப்பு

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ அளவிலான வெடிபொருட்கள் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் வெடிபொருள் உற்பத்தி நிறுவனத்தில் முறையாக அழிக்கப்பட்டது.



கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ வெடி பொருட்கள் முறையாக அழிக்கப்பட்டன.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து சிலிண்டர் வெடிபொருள்களை காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் சதி திட்டத்தை தீட்ட ஜமேசா முபின் உள்ளிட்டோர் முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து முதல் கட்டமாக பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ அளவிலான வெடிப்பொருட்கள், கோவை சுல்தான்பேட்டை வாரப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் வெடி பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் முன்னிலையில் முறைப்படி அழிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...